ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்🙏. ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க
1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம் -4 க்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (27-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கட்டகம் - 5 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (21-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும். இனி வரும் வாரங்களில் மீதமுள்ள அனைத்து கட்டகங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வார காலத்திற்கு நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும்.
கட்டகம் - 6 க்கு வளரறி மதிப்பீடு ஆ இல்லை.
ஜூலை மாதம் 31 ஆம் தேதி முதல் கட்டகம் - 3, கட்டகம் - 4 ,கட்டகம் - 5,கட்டகம் - 6 ஆகிய நான்கு கட்டங்களுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு - எழுத்துத் தேர்வாக வைக்க வேண்டும். இதற்கான வினாத்தாள் நம்முடைய செயலியில் ஜூலை மாதம் 30-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் pdf வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.
அதை நகல் எடுத்துக்கொண்டு ஜூலை 31ஆம் தேதி முதல் மாதாந்திர எழுத்துதேர்வாக வைத்துக் கொள்ளலாம்.
நன்றி - SCERT
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி