பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.500 அபராதம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2023

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.500 அபராதம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

 

இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென்ற உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி 6 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்தொடர்ந்த பள்ளிக் கல்வி துறைக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட வெண்ணிலாவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 8 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பின்னரும் ஓப்புதல் அளிக்காததால், மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக மூன்று முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், 2016-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி கல்வித்துறை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், 2016ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று 2 ஆயிரத்து 148 நாட்கள் காலதாமதத்துடன் கல்வித்துறை மனுத் தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இத்தொகையை ஒரு வாரத்தில் சட்டப்பணி ஆணைக்குழுவிடம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. ரொம்ப அதிக தொகை. கட்ட முடியாது அவரால.

    ReplyDelete
  2. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில்..... பகுதி நேர ஆசிரியர்களுக்கும் விரைவில்.... ஆக மொத்தம் அனைவருக்கும் விரைவில்... வருடாவருடம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மட்டும் உடனுக்குடன்.... சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதம் வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் 9 வருடம் வீண். தற்போது இரண்டு ஆண்டுகள் வீண். தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி