தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை பருவத்துக்கான இறுதித் தேர்வு: ஆக.5-ம் தேதி தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2023

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை பருவத்துக்கான இறுதித் தேர்வு: ஆக.5-ம் தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 2023 பருவத்துக்கான இறுதித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.


பதிவாளர் எஸ்.பாலசுப்ரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 2023 பருவத்துக்கான இறுதித் தேர்வின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆக.5 முதல் அக்.8-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் அரசு விடுமுறை தவிர்த்து, அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.


தேர்வுக்கான கால அட்டவணை www.tnou.ac.in என்றபல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, ஒரு வாரத்துக்கு முன்பு இதேஇணையதளத்தில் வெளியிடப்படும். அதேபோல் செய்முறைத் தேர்வுக்கென தனியாக நுழைவுச்சீட்டும் இந்த இணையதளத்தின் வாயிலாகவே வழங்கப்படும்.


இறுதித் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் ஏதேனும் அரசு தேர்வுகள் வரும்பட்சத்தில், அவற்றை எழுத விரும்பும் மாணவர்கள் அரசு தேர்வுகள் அறிவித்தவுடன் வேண்டுதல் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றுடன் வழங்க வேண்டும். இதனை பல்கலைக்கழகம் பரிசீலித்து, அவர்களுக்கு மட்டும் அலுவலக வேலைநாட்களில் பல்கலைக்கழக வளாகத்தில் தனி தேர்வுகள் நடத்த பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி