நீண்ட நாள் பணிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2023

நீண்ட நாள் பணிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு.

அரசு பள்ளிகளில் நீண்ட நாள் பணிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்குமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், மாவட்டந்தோறும் குறைந்தபட்சம், 100 பேராவது அவ்வப்போது, தகவல் அளிக்காமல், நீண்ட நாள் விடுப்பு எடுப்பதும், பின் பணிக்கு வருவதுமாக உள்ளது தெரிய வந்து உள்ளது.


சில ஆசிரியர்கள் எந்த தகவலும் இன்றி, ஆண்டுக்கணக்கில் விடுப்பு எடுத்து விட்டு, சம்பளம் மட்டும் பெறுவதும் கண்டறியப்பட்டுள்ளது.


இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளதால், மாவட்டந்தோறும், நீண்ட நாள் விடுப்பு எடுத்தவர்களை களையெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் வழியே, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


அதில், பள்ளிகளில் நீண்ட நாள் பணிக்கு வராமல், தகவலும் அளிக்காமல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை, முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. விவரம் சேகரிச்சு.... ஒன்னும் பண்ணமுடியாது.... பழைய பேப்பர் கடைக்கு வேணா எடைக்கு போடலாம்.... அவ்ளோதான் பண்ணமுடியும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி