அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழ் - அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2023

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழ் - அமைச்சர் அன்பில் மகேஸ்

 

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் நோக்கில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மாவட்டப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.


சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் 24 ஆயிரம்மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் வெளியிடும் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் 2500 பிரதிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ச.மார்ஸ் முன்முயற்சியில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் அரசு பள்ளிகளுக்கு வாங்கப்படவுள்ளது.


பள்ளி கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வாசிப்பு நேரத்தில் ‘வெற்றிக்கொடி’ நாளிதழை வாசித்து, மாணவர்களின் தமிழ்மொழித்திறனை மேம்படுத்துவதோடு, பிழையின்றி தமிழை வாசிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், ராயப்பேட்டை அரசினர் ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அண்ணாசாலையிலுள்ள அரசினர் மதரஸா இ-ஆசம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை வழங்கினார்.சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், பள்ளி மாணவர்களிடம் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

2 comments:

  1. முதலில் அந்த மாணவர்களுக்கு தேவையான நிரந்தர ஆசிரியர்களை பணி நியமனம் செய் பஆஆஆ.... அப்புறம் வாசிப்பு திறனை மேம்படுத்தலாம்....

    ReplyDelete
  2. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிறைய பேருக்கு ஆங்கிலம் வாசிக்கவே தெரியாது. அப்புறம் மாணவர்களுக்கு எப்படி வாசிக்க வரும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி