தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர 2.46 லட்சம்பேர் விண்ணப்பித்தனர். இதில்84,899 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள இடங்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
அதில் ஒரு சமூகப் பிரிவில் காலிஇடங்கள் இருந்தால், அதை பிற சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
எஸ்.சி./எஸ்.டி. பிரிவில்காலியிடம் இருப்பின், அவற்றை எம்பிசி பிரிவுக்கு வழங்க வேண்டும். எம்பிசி பிரிவில் காலியிடம் இருந்தால், அதை பி.சி. பிரிவுக்குஒதுக்க வேண்டும் என்றுஉயர்கல்வித் துறை அறிவுறுத்திஉள்ளது.
இதற்கிடையில், அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. இதையொட்டி, மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும், ராகிங் போன்ற அத்துமீறல்களைத் தடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்கவும் வேண்டுமென கல்லூரி நிர்வாகங்களுக்கு, உயர்கல்வித் துறை அறிவுறுத்திஉள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி