பதவி உயர்வு பணிகளை நிறுத்த அமைச்சருக்கு ஆசிரியர்கள் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2023

பதவி உயர்வு பணிகளை நிறுத்த அமைச்சருக்கு ஆசிரியர்கள் கடிதம்

 பணி மேம்பாட்டு பதவி உயர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், பதவி உயர்வு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என, அமைச்சர் பொன்முடிக்கு, அண்ணா பல்கலை ஆசிரியர்கள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.


கடிதத்தில் கூறியிருப்பதாவது:


அண்ணா பல்கலை இரண்டு மாதங்களுக்கு முன் நடத்திய பணி மேம்பாட்டு பதவி உயர்வு தேர்வில், முக்கிய துறைகளில் இருந்து பங்கேற்றவர்களில், 40 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதில் குளறுபடி நடந்துள்ளதாக ஏற்கனவே புகார் அளித்தும், பதவி உயர்வு நடைமுறை தொடர்கிறது.


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிப்படி, ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும்.


நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம், அவர்களின் துறை சாராத கேள்விகளை கேட்டுள்ளனர். ஆசிரியர்களின் கற்பித்தல் அனுபவத்துக்கும் உரிய மதிப்பெண் வழங்கவில்லை.


எனவே, உரிய விதிப்படி நடக்காத பதவி உயர்வு நடைமுறையை உடனே நிறுத்த வேண்டும். புதிதாக பேராசிரியர் நியமனம் செய்வதையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.


இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையே, பணி மேம்பாட்டு பதவி உயர்வு முறையில் குளறுபடிகள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க, ஏற்கனவே, தமிழக உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் பழனிச்சாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி