போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை நாளை பேச்சுவார்த்தை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2023

போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை நாளை பேச்சுவார்த்தை


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லாத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட அடுக்கடுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் 25-ந் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


ஆனால் இந்த அழைப்பில் பொதுவாக குறிப்பிட்டுள்ள சங்கம் என்பது குழப்பமாக இருக்கிறது என்றும், எங்களுக்கு அப்படி ஒரு அழைப்பு வரவில்லை என்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். மேலும் அவர், வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

இதேபோல், 1.6.2009-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கமும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது. அதன் மாநில தலைவர் ராபர்ட், 'திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடக்கும்' என்று தெரிவித்தார்.

5 comments:

 1. சங்கங்களின் முக்கிய வேலை சந்தா வாங்குவது...மற்றும் அரசுக்கு அழுத்தம் தருவது . அதோடு விட்டு விடுவது நலம்.... ஆசிரியர்கள் பணியாளர்களை பரபரப்பு கூட்டி விட வேண்டாம்....

  ReplyDelete
 2. .அரசு ஊழியர்கள்
  ஆசிரியர்கள் கூட்டமைப்பு

  போராட்டம் அறிவிப்பு..

  அரசுடன்
  பேச்சு வார்த்தை...

  போராட்ட
  அறிவிப்பு வாபஸ்...

  கோரிக்கை எதுவும்
  நிறைவேற்றப்படாது...

  மீண்டும்
  போராட்டம் அறிவிப்பு...

  மீண்டும் அரசுடன்
  பேச்சு வார்த்தை...

  மீண்டும் போராட்ட
  அறிவிப்பு வாபஸ்...

  மீண்டும் கோரிக்கை
  நிறைவேற்றப்படாது...

  ரீப்பீட்டு...

  இப்படித்தான் கடந்த
  இரண்டரை வருடமாக சென்று கொண்டிருக்கிறது...

  எடப்பாடி சங்கங்களை
  கூப்பிட்டு பேசாமலேயே..

  எதுவும்
  நிறைவேற்றவில்லை..

  ஸ்டாலின் சங்கங்களை
  கூப்பிட்டு பேசிப்பேசி...

  எதுவும்
  நிறைவேற்றவில்லை...

  வேறு எதுவும்
  வேறுபாடில்லை....

  எடப்பாடி அரசு ஊழியர்கள்
  ஆசிரியர்களுக்கு எதிரி...

  ஸ்டாலின் அரசு
  ஊழியர்கள்
  ஆசிரியர்களுக்கு துரோகி..

  இப்படித்தான் பொருள்
  கொள்ள வேண்டி உள்ளது..

  எதிரியை நம்பலாம்...

  நம்ப வைத்து கழுத்தறுத்துக்
  கொண்டிருக்கும் துரோகியை
  நம்பவே கூடாது...

  விழித்தெழுங்கள்
  சங்கத் தலைமமைகளே...

  நாடாளுமன்ற தேர்தல்
  நெருங்குகிறது....

  ஆட்சியாளர்களுக்கு
  புரியும் மொழியில்
  பேசத் தயாராகுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. அழுத்தம் தருவார்கள் பிதுங்கி விடாமல் 😆😆

   Delete
 3. அனைத்து சங்கமும் waste....

  ReplyDelete
  Replies
  1. கொடுக்கற அழுத்தத்துல....
   ம்ம்ம்.... அழுத்தத்துல.... அடுத்து என்ன நன்றி அறிவிப்பு மாநாடு தான்....😆

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி