தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் விபரம் சேகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2023

தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் விபரம் சேகரிப்பு

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களின் ஒன்பது ஆண்டு பட்டியலை சேகரிக்குமாறு, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வியின் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனர் ஆர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து மாவட்டங்களிலும், கடந்த, 2014ம் ஆண்டு முதல், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் பெயர் மற்றும் விபரங்களை சேகரித்து, பட்டியலாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:


மத்திய அரசின் கல்வித்துறை சார்பில், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு மாநிலத்திலும், 2014ம் ஆண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை, தரவுகளாக சேகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.


நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் வழியே, பாடத்திட்டம், கற்பித்தல் முறை போன்றவற்றில் தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி