School Morning Prayer Activities - 06.07.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2023

School Morning Prayer Activities - 06.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :209

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

விளக்கம்:

தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செய்யக்கூடாது

பழமொழி :
A penny saved is a penny gained

சிறு துளி பேரு வெள்ளம்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.

 2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

ஒரு போதும் மனம் தளர வேண்டாம் ஏனெனில், சரியான இடம் மற்றும் காலத்தில் எல்லாம் மாறிவிடும்”- ஹரியட் பீச்சர் ஸ்டோ


பொது அறிவு :

1. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் யார்?


விடை: ஜவஹர்லால் நேரு.

2. 1761 இல் மராத்தியர்கள் முகலாயர்களை தோற்கடித்த போரின் பெயர் என்ன?


விடை: மூன்றாவது பானிபட் போர்.English words & meanings :

 rectify -put right; correct the mistake made. verb. திருத்து
, சரிப்படுத்து. வினைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

உருளை கிழங்கு : வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.


நீதிக்கதை

கோபத்தின் கதை!

ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து

கொண்டே இருந்தது. 

ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும்

நிறைய ஆணிகளையும் கொடுத்தார். "இனிமேல் கோபம் வரும் போது எல்லாம்

வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்".

முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம்

கூறினான்.

இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.

உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை

என்ன செய்வாய்?


உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும். அல்லவா?   எனவே இனி  ஒருபோதும் கோபம் கொள்ளாதே "என அப்பா கூற வாலிபன் ஏற்றுகொண்டான்.


இன்றைய செய்திகள் - 06.07. 2023

*கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு.

*தக்காளி மற்றும் இஞ்சி விலை கடும் உயர்வு.

*அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்- இரண்டரை ஆண்டுகளில் 1.94 லட்சம் மாணவிகள் பயன். 

*சென்னை, 
அண்ணாசாலை, தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட சாலை ரூ. 621 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. 

*இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் ஆனார் முன்னாள் 
ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர்.

*தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி.
5க்கு 4 என்ற கோல் கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி ஒன்பதாவது முறையாக பட்டத்தை வென்றது.

Today's Headlines

*Flooding in Coimbatore Courtalam waterfall due to heavy rain.

 *Tomato and ginger prices have increased sharply.

 *Innovation Women Scheme which provides Rs.1000 to female students studying in government schools and pursuing higher education - 1.94 lakh female students benefited in two and a half years.

 *Rs 621 crore was allocated For Chennai,
 high level road between Annasalai, Thenampet and Saidapet.

 * All rounder Ajit Agarkar become Indian Cricket Team Selection Committee Chairman.

 *India won the South Asian Football Championship.
 Defeated Kuwait 5 to 4 ,to win the title for the nineth time.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி