கல்வி உதவித் தொகைக்கான திறனாய்வு தேர்வு: ஆக.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2023

கல்வி உதவித் தொகைக்கான திறனாய்வு தேர்வு: ஆக.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

 

தமிழக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ம் கல்வியாண்டு முதல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ நடத்தப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வு எழுதலாம். இதில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 தரப்பட உள்ளது.


பள்ளிகளில் விழிப்புணர்வு: இதற்கான தேர்வு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. 9,10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களின் அடிப்படையில் தேர்வு வினாத்தாள்கள் இருக்கும். விருப்பமுள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பூர்த்தி செய்த படிவங்களை ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் ரூ.50 கட்டணத்துடன் சேர்த்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தேர்வில் அதிக மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் உரிய விழிப்புணர்வு பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி