25.08.2023 முதல் காலை உணவுத்திட்டம் - அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் தொடங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2023

25.08.2023 முதல் காலை உணவுத்திட்டம் - அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் தொடங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் , தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவ , மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுகிறது. அத்திட்டம் நாகை மாவட்டம் , திருக்குவளையில் 25.08.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கப்படுகிறது. அதே நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் சார்ந்து , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பார்வை ( 2 ) ல் காணும் கடிதம் மூலம் ஆயத்த பணிகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மாவட்ட ஆட்சியரின் அறிவுரையினை பெற்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அத்திட்டத்தினை மேற்கொள்ள செயல்படுத்திட தக்க நடவடிக்கை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. So now director gives all his responsibility to collector's...Then only they will escape from all issues.... சங்கங்கள் செத்து விட்டதோ... இல்லை அடமானம் போய் விட்டதோ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி