பள்ளிகளில் இன்று குடற்புழு நீக்க சிறப்பு முகாம்: 2.69 கோடி பேருக்கு மாத்திரைகள் வழங்க இலக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2023

பள்ளிகளில் இன்று குடற்புழு நீக்க சிறப்பு முகாம்: 2.69 கோடி பேருக்கு மாத்திரைகள் வழங்க இலக்கு

 

தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த இரண்டு மாதங்களிலும் நாடு முழுவதும் 19 வயதுக்குட்பட்ட சிறார் மற்றும் 30 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களுக்கு ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.


நடப்பாண்டில் தகுதியான அனைவருக்கும் குடற்புழு நீக்கமாத்திரைகளை வழங்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 17-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்கள் மற்றும் 20முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பணியில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். விடுபட்டவர்களுக்கு மாத்திரை வழங்க ஆக.24-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறஉள்ளது.


குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்ளாதபட்சத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோர்வு நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி