அரசு பள்ளிகளில் 6000 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2023

அரசு பள்ளிகளில் 6000 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

 

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் மேனிலைப் பள்ளிகளில் 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 1000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தொடக்கப் பள்ளிகளில் 2000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுத்துள்ளது. அதேபோல நடுநிலைப் பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்துள்ளது.


நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியை கொடுக்க பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் கணக்கு பாடங்களுக்கு மட்டுமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தமிழ், சமூக அறிவியல் பாடங்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்பதால் அந்த பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவதால் அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடுநிலைப் பள்ளிகளில் பணி நியமனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தகுதியடைந்தவர்களுக்கு மீண்டும் பணிநியமனத்துக்கான தேர்வை நடத்தாமல், தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. அதன் பேரில், விரைவில் சுமார் 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்த நியமனங்களில் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

16 comments:

  1. விரைவில் நிரப்பப்படும்.... விரைவில் நிரப்பப்படும்...

    ReplyDelete
  2. ஆறாயிரம் குடும்பம் பிழைக்க வாழ்த்துக்கள். எந்த முறையில் போட்டாலும் சரி, டெட் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்கு சென்றால் சந்தோசம்.

    ReplyDelete
  3. சும்மா போவியா....
    இதுபோல் ஆயிரம் செய்தியை பார்த்து விட்டோம்.....

    ReplyDelete
  4. na 108 marks...enaku kidaikkuma frns

    ReplyDelete
  5. விரைவில் திமுக பாடம் கற்கும் 😆😆

    ReplyDelete
  6. விரைவில்......


    ReplyDelete
  7. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & கல்வியியல்
    குமாரசாமி பேட்டை
    தர்மபுரி
    (வகுப்புகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது)
    Contact - 9344035171

    ReplyDelete
  8. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & கல்வியியல்
    குமாரசாமி பேட்டை
    தர்மபுரி
    (வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது)
    Contact - 9344035171

    ReplyDelete
  9. College asst prof post around 6000 to 8000 vacant we don't know when to be filled

    ReplyDelete
  10. PG trb physics material available here, also year question , contact 8667088965

    ReplyDelete
  11. Pg trb commerce material available here, contact 9952636476

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி