தேசிய கைத்தறி தினம் கட்டுரை போட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2023

தேசிய கைத்தறி தினம் கட்டுரை போட்டி

 தேசிய கைத்தறி தினத்தையொட்டி, காஞ்சிபுரம் பட்டுப்பூங்கா நிர்வாகம் சார்பில், கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் இயங்கி வரும், அண்ணா நினைவு கைத்தறி பட்டுப்பூங்கா இயக்குனர் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


ஒன்பதாவது தேசிய கைத்தறி தினம், காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் உள்ள பட்டுப்பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பட்டுப்பூங்கா நிறுவனத்தின் சார்பில், தற்போது ஆடை உற்பத்தி பெருகி வரும் சூழ்நிலையில், கைத்தறி ஆடைகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற உள்ளது. கட்டுரைகள் வரும் 6ம் தேதி, மாலை 5:30 மணிக்குள், 88257 84926 என்ற, வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். கட்டுரை எழுத முடியாதவர்கள் குரல் மூலம் அதே, வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். போட்டி முடிவுகள் கைத்தறி தினமான, வரும் 7ம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றே பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி