பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2023

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:

சேலம் மாவட்ட தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:

     2012 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு கிட்டத்தட்ட 16549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் 12200 பகுதி ஆசிரியர்கள் தற்பொழுது பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 வீதம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
     கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக ஆட்சி அமைத்தால், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் அறிக்கை எண் 181ல் கூறியிருந்தது.

     இது தொடர்பாக தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் பலகட்ட முயற்சிகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கல்வி அமைச்சர் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத் தலைவர்களை அழைத்து பேசினார். அவர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்தார். அவரின் சீரிய முயற்சியால் நிதி அமைச்சரையும் சந்திக்க வைத்தார். பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகவும், இந்த தகவலை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கல்வி அமைச்சர் உறுதி அளித்தார். இதை நினைவூட்டும் வண்ணம் இன்று சேலத்தில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

     சொன்னதை செய்யும் திமுக அரசு பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கூடிய விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்ற நம்பிக்கையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டுள்ளது. 13 கல்வி ஆண்டுகளாக பணி பாதுகாப்பின்றி வாடும் பகுதி நேர ஆசிரியர்களை மேலும் தாமதப்படுத்தாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தாமதமாகும் பட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னை DPI வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் (நிச்சயம் எங்களுக்காக விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்) நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி

4 comments:

  1. சூரியன் மேற்கில் கூட உதிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக மாற்ற வாய்ப்பே இல்லை. உண்மை எப்போதும் கசக்கும். உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டு அதே வேலையை நம்பி எங்களை பிதுகிடார்கள் கசகிட்டார்கள் வாழ்வாதாரத்தை கெடுத்து விட்டார்கள் என்று புலம்பாமல் தயவு செய்து வேற நல்ல வேலைக்கு சென்று உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். உங்களை வைத்து அரசியல் வாதிகளு்ம் சங்கங்களும் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னிங்க பார்லிமென்ட் எலக்சன் தான் சரியான பதிலடி இருக்கும் 😆

      Delete
  2. சட்ட மன்ற தேர்தலில் திமுக வென்றால் வசந்தம் வீசும் என்றார்கள்... பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள்... நீங்க ஓட்டு போட்டிங்க ஃபிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி கிட்ட ஓட்டு போட சொன்னிங்க....இப்ப வேணா பார்லிமென்ட் எலெக்ஷன்ல பதிலடி கொடுத்து பாருங்க... தானா வேலை வரும் 😆

    ReplyDelete
  3. சங்கங்கள் சேர்ந்து பெண் ஆசிரியர்களை வாழ விடுங்க"வாழ் வாழ விடு"😡😡😡😡😡😡😡

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி