ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2023

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

 

ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - 2023-2024 ஆம் கல்வியாண்டு - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.



6 comments:

  1. ஒரு வேலையை கூட உங்களால் ஒழுங்காக முடிக்க முடியாதா கேடு கெட்ட திருட்டு அரசு....

    ReplyDelete
  2. உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடத்தி விட்டு உடனடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வை எளிதில் நடத்தலாம்.

    இதற்கு தடை / தள்ளி வைப்போ தேவை இல்லை.


    இதுபோன்ற சிறு சிறு வழக்குகளால் தான் பல ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் பணி நியமனம் ஆசிரியர் தேர்வு முறை போன்றவை தாமதமாகி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது.

    100% யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயலையும் அரசாங்கத்தாலும் தனிநபராலும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க இயலாது.


    பல ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் தங்களது குடும்பத்தையும் துணைவரையும் பிரிந்து பணி புரிகின்றனர்

    எனவே உடனடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடித்து மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.



    ReplyDelete
  3. பணியிட மாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளிவந்தவுடன் இது குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் / அதிகாரியிடம் தெரிவித்து சரி செய்து இருக்கலாமே.

    ஏன் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்?


    தவறாக அரசாணைகள் வழிகாட்டுதல் வழங்கியிருந்தால் துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படி அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கும் வகையில் ஏன் கலந்தாய்வை தள்ளி வைத்து நிறுத்தி வைத்து பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்?

    ReplyDelete
  4. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் மேற்கொண்டு இருந்தால் இன்று எவ்வித பிரச்சனையும் இல்லாமல் 10 வருடங்களாக பணி நியமனம் நடைபெற்று இருக்கும்.

    ஆனால் புதிதாக ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வியையும் வேலை வாய்ப்பையும் ஆசிரியர்களின் பணி சுமை அதிகரித்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றனர் அதிகாரிகள்.

    ReplyDelete
  5. பல வருடம் பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்களை தகுதி தேர்வு வைத்து பதவி உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் தவறான ஒரு செயல்.



    உலகத்தில் எந்த துறையிலாவது பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு என்று இருக்கிறதா ?



    போதிய கல்வி தகுதி இருந்தால் பதவி உயர்வு வழங்கிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாமே


    இப்படி பணி நியமனம் முதல் பதவி உயர்வு வரை அனைத்து நிலையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது.

    ReplyDelete
  6. அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் ஒவ்வொரு வகுப்பிற்கும் அல்லது ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் நியமனம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் உடற்கல்வி ஓவிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்க வேண்டியது தானே?

    அரசு செய்யும் ஏதாவது ஒரு விஷயத்தில் தடையானை பெறுவது தள்ளி வைப்பது குறை காண்பது போன்ற செயல்கள் யாருக்காவது பயன் அளிக்குமா?

    ஒரு பிரச்சனை என்றால் அதில் உள்ள குறைபாடுகளுக்கு ஆலோசனை தீர்வு வழங்கி அதனை சரி செய்து வெற்றிகரமாக அப்பொழுதே முடிக்க வேண்டும்.

    தடை ஆணை பெறுவதும் தள்ளி வைப்பதும் சுனக்கத்தை ஏற்படுத்தி தொய்வை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி செயல் திறனை குறைத்து விடும் இதன் பாதிப்பு மாணவர்களுக்கு தான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி