ஆய்வக உதவியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு எப்போது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2023

ஆய்வக உதவியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு எப்போது

நேரடி நியமனம் வாயிலாக பணியில் சேர்ந்த ஆய்வக பணியாளர்களுக்கு ஏழு ஆண்டுகளாக பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாததால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர்.


பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களுக்கு 4393 ஆய்வக உதவியாளர்கள் எழுத்துத்தேர்வு வாயிலாக நியமிக்கப்பட்டனர்.


2017ல் பணியில் சேர்ந்த இவர்களுக்கு ஏழு ஆண்டுகளாக பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.


இதனால் வெளிமாவட்டங்களில் பணிநியமனம் பெற்ற பலர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர்.நடப்பு கல்வியாண்டுக்கான பணியிடை பயிற்சி விரைவில் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழ்நாடு நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் அர்ஜூன் கூறுகையில் ''ஆறாவது ஊதியக்குழுவில் பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு பணியில் சேர்ந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்தால் 4300 ரூபாய் தரநிலை ஊதியம் கூடுதலாக வழங்க அறிவிக்கப்பட்டது.


ஏழாவது ஊதியக்குழுவில் இந்த அறிவிப்பு இல்லை. ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு இல்லாததால்பணிக்கால அனுபவத்திற்கு ஏற்ப தரநிலை ஊதியம் உயர்த்திவழங்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்'' என்றார்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி