அதிகரிக்கும் பணிச்சுமை - புலம்பும் ஆசிரியர்கள் - கண்டுகொள்ளுமா சங்கங்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2023

அதிகரிக்கும் பணிச்சுமை - புலம்பும் ஆசிரியர்கள் - கண்டுகொள்ளுமா சங்கங்கள்?

 

சத்துணவு திட்டம்,

விலையில்லா பாடத்திட்டம்

கலைத்திருவிழா

மன்றச்செயல்பாடுகள் என அனைத்து

திட்டங்களும் வரவேற்கப்படுகிறது ஆனால் அதனை செய்யல்படுத்தும் முறைகள் பற்றி சிந்திக்கவேண்டி உள்ளது.


பள்ளிக்கல்வித்துறையில் மட்டுமே இம்மாதிரியான நடைமுறைகள் தொடர்ந்து அறங்கேறிக்கொண்டே இருக்கிறது. 


அதனைப்பற்றி ஆசிரியர் சங்கங்கள் பல இருந்தும் ஆசிரியர்கள் பணிச்சுமை குறித்து கண்டும் காணாமல் இருப்பது வியப்பாகத்தான் உள்ளது.


ஆசிரியர்களுக்கான வேலை என்பது கூடுதலாகிக்கொண்டே போகிறது பணிநேரமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 7மணிக்கு ஆரம்பித்து தற்போதெல்லாம் 7 ஏன் 8 மணிவரை கூட நீள்கிறது. தொழிலாளர் நலன் சார்ந்த 8 மணிநேரப்பணி என்கின்ற சட்டம் மறைமுகமாய் அழித்தொழிக்கப்படுது தெரிகிறதா இல்லையா...


சத்துணவு திட்டம் உள்ளாட்சி துறையால் நடத்தப்படுகிறது. அதற்கென சத்துணவு அமைப்பாளர், சமையளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனை பார்வையிட BDO, Dept BDO,.... collector PA  வரை உள்ளனர். அதில் ஏதேனும் ஒரு தவறு ஏற்பட்டால், மாணவர்கள் பாதிக்கப்பட்டால் ஏன் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அப்போ உள்ளாட்சி துறைக்கு  எதற்கு இத்தகு பொறுப்புகள்?


அடுத்து BLO மற்றும் DLO பணிக்கு வருவோமே இந்த பணிக்கு ஆசிரியர்கள் மட்டும் தான் நியமிக்கப்பட வேண்டுமா என்றால் இல்லை தேர்தல் ஆணையம் 13- வகை பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என பரிந்துரைப்பு செய்தும் ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். இப்பணியினால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர் நமது ஆசிரியர்கள். 


அடுத்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இனக்குழு சான்று விண்ணப்பித்து பெற்று வழங்குவது.


மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிக்கு அனுப்ப உத்தரவுகள் இருந்தும் ஆசிரியர்கள் சென்றுதான் தொடக்கல்வித்துறையை பொறுத்தமட்டில் பெற்று வழங்க வேண்டிய சூழல் உள்ளது.

அதன் செலவீனங்களுக்கு இதுவரை யாரும் கணக்கீடுகள் வைப்பதில்லை. சொந்த செலவில் தான் ஆட்டோவிற்கும், பிக்கபிற்கும் வாடகை தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இத்தொகை தலைமையாசிரியர்கள் தலையில் தான் விடிகிறது.


அடுத்து பள்ளிகளில் சாக்பீஸ் வாங்கும் கணக்கை பள்ளி செலவீனங்களில் காட்டக்கூடாது என ஆடிட்டில் சொல்கிறார்கள் அப்போ தலைமையாசிரியர் ஏற்க வேண்டி உள்ளது. அல்லது ஆசிரியர்கள் தான் ஏற்க வேண்டியுள்ளது.


இப்படி போய்கிட்டு இருக்கிற சூழ்நிலையில் ஓய்வூதியம் குறித்து கேட்டா அரசு தரப்பில் ஆசிரியர்கள் கூடுதலாக சம்பளம் கோருகிறார்கள் என்ற ஒரு அரசியல் 1,00,000 வாங்கும் மாதச்சம்பளம் வாங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியில் அக்கரை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு வேறு.


கடந்த காலகட்டங்களின் ஆசிரியர் ஊதியத்தையும் தங்கத்தின் விலையையும் ஒப்பிட்டு பாருங்கள்...


தற்போதைய சூழலில் ஆசிரியர் சம்பளத்தையும் தங்கத்தின் விலையையும் ஒப்பிட்டு பாருங்கள்...


ஒன்றுமே மிச்சமிருக்காது 


அன்று 4000₹ வாங்கிய ஆசிரியர் இன்று 1,00,000₹ சம்பளம் வாங்கி இருந்தாலும் அவர் அதிகபட்ச்சமாக 2 பவுணுக்கு தான் ஒர்த்து இது BT யின் நிலை


SG - என்றால் அந்தோ பரிதாபம் அவுங்க ஒர்த் 1 பவுன் தான்.


இங்க எங்கப்பா ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குறாங்க என ஏன் பொய் பேசும் ஊடகங்களுக்கு சங்கங்கள் பதில் அளிக்கவில்லை என்பது ஒட்டு மொத்த ஆசிர்களின் நீண்ட கால வேதணை.


சுழற்சி முறையில் தானே காலை உணவுத்திட்டத்தை கண்கானிக்க வரச்சொல்கிறோம் என்றால் அந்த நாள் அன்று காலையில் ஆண் பால் ஆசிரியர்களோ அல்லது பெண்பால் ஆசிரியர்களோ எப்படி குடும்பத்தின் கடமைகளை விட்டு விட்டு வருவது. வயதான பெற்றோர் இருக்கலாம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலை இருக்கலாம், இயலாத மனைவி இருக்கலாம். இப்படியான பல்வேறு சூழ்நிலைகளை கொண்டுள்ள காரணங்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு எப்படிவருவது.


BLO பணியில் ஒரு வீட்டுக்கு சென்று சர்வே பணியினை செய்ய முற்படுகையில் வேலைக்கு சென்றுவிட்டு வரும் குடிமக்கள் 6-மணிக்கு மேல்தான் வருகிறார்கள். இச்சூழ்நிலையில் ஒருவீட்டிற்கு 20-நிமிடம் முதல் 1/2 மணிநேரம் ஆகிவிடுகிறது 4-வீடுகள் முடிக்க 8 மணியாகிறது. பெரும்பாலும் பள்ளிக்கல்வித்துறையில் ஆண் ஆசிரியர்களைவிட பெண் ஆசிரியர்களே அதிகம் இவர்கள் 7- 8 மணிக்கு BLO பணி முடித்து வீடு வர 8-8.30 ஆகிறது. வந்ததும் இரவு சமையல், பிள்ளைகளை கவணிக்க முடியாத சூழல், அப்பாட எனப்படுத்தால் வாரத்தில் ஏதோ ஒரு நாள் காலையிலும் உணவு டியூட்டி.


இத்தகு கொடுமையான சூழ்நிலையை ஏன் யாரும் உணரவில்லையா என கேட்டால் யார்கிட்ட சொல்ல என மன அழுத்தங்களோடு புலம்பும் அடிமைச்சமூகமாய் மாறிவிட்டது ஆசிரியர் சமூகம். 

 

வட்டாரம் தோறும் மாவட்டம் தோறும் மாதம் ஒரு கூட்டம் நடத்துங்க ஆசிரியர் சங்கங்களே ஆசிரியர்களின் மனக்குமுறல்களை கேளுங்க யாருமே வரமாட்டிங்கிறாங்க என்ற பதிலை திரும்ப திரும்ப சொல்லாதீங்க அவுங்க எல்லோரும் சுதந்திர தினத்தை கூட கட்டாயத்தின் பேரில் தான் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். 


இச்சமூகத்தினை கல்வியால் மாற்றத்துடிக்கும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகளை கொடுத்து மாணவர்களின் கல்வி உயர்வினை சிதறடிப்பதை பற்றி பேசுவோம், விவாதிப்போம்...


சங்கங்கள் அனைத்தும் நமக்கானதே அனைத்து சங்களின் செயல்பாடும் அதன் உறுப்பினர்கள் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு உறுப்பினர்களும் சங்கங்களுக்கு சந்தா தொகை கொடுப்பதோடு நம் கடமை முடிந்துபோனதாய் கருதாமல் செயலாற்றுவோமே...


மாதந்தோறும்  ஒரு அரைநாள் நாம் அற்பணித்திருந்தால் நமக்கான பணிச்சுமை இவ்வளவு அதிகரித்து இருக்காது.


ஒவ்வொரு சங்கமும் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நம்மை வழிநடத்த, நம்குறைகளை கேட்க்க அவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்பதை நாமும் மறந்துவிட வேண்டாம்.

2 comments:

  1. சங்கங்கள் செயல்படமுடியாமல்இருப்பதற்கு பெண் ஆசிரியர்கள் அதிக சதவீதம் வேலையில் இருப்பதும் ஒரு காரணம் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. Correct...enna sonnalum mandaiya aatikittu maadu maathiri poga vendiyathu

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி