TET - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 21.08.2023 முதல் தொடக்கம் - செய்தி அறிக்கை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2023

TET - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 21.08.2023 முதல் தொடக்கம் - செய்தி அறிக்கை வெளியீடு.


தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அமையங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன . தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ( TRB ) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு 2023 டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது . மேலும் இத்தேர்வு தொடர்பான விவரங்கள் அறிந்து கொள்ள Glamotron http://www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.


இதனைத் தொடர்ந்து சென்னை , கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான கட்டணமில்லா நேரடி ( Offline ) பயிற்சி வகுப்புகள் 21.08.2023 அன்று தொடங்கப்படவுள்ளது . இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன . இவ்வலுவலகத்தால் நடத்தப்படவுள்ள TET Paper -1 மற்றும் Paper - II தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள Google Form link https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8 அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள QR ஸ்கேன் செய்து தங்களின் விவரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.


TET Free Coaching Classes - Press News - Download here..


2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி