3 மாதத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2023

3 மாதத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா!

 

கடந்த ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்கா தூதரகம் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை:உலகளவில் 4ல் ஒரு இந்திய மாணவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 

தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விசா கிடைத்துள்ளது. உயர்கல்வி கனவை நனவாக்க அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 30,000 மாணவர்களை வரவேற்க பிரான்ஸ் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது.

2030ம் ஆண்டுக்குள் இந்திய மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்தும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி