டிட்டோ-ஜாக் சார்பில் இன்று ( 7.9.2023 ) நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட பிரதானமான கோரிக்கைகள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2023

டிட்டோ-ஜாக் சார்பில் இன்று ( 7.9.2023 ) நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட பிரதானமான கோரிக்கைகள்:

மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..


டிட்டோ-ஜாக் சார்பில் 11.9.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில்  மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்:


டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை  5.30 மணி அளவில் இணைய வழியில் நடைபெற்றது.

அனைத்து உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


வருகிற 11.9.2023 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும்  மாவட்டத்தலைநகரில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


பிரதானமான கோரிக்கைகள்:


👉(1) எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

புதன்,வெள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போன்ற பணியை முற்றிலும் நீக்கவேண்டும்.


👉 (2)B.Ed படிக்கும் பயிற்சி  மாணவர்களை கொண்டு  பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய உட்படுத்தக்கூடாது.

👉 (3) EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.


👉(4) ஆசிரியர்களை(RP) கருத்தாளர்களாக நியமிக்கக்  கூடாது.


👉(5) விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கக்கூடாது.

 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற உள்ளது.. கோரிக்கைகளை வென்றெடுக்க ஆர்ப்பாட்டக்களம் நோக்கி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றியடைய செய்யுமாறு களப்பணி ஆற்றிட டிட்டோஜா நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட செயலாளர் பெருமக்கள், வட்டாரச் செயலாளர் பெருமக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்..

இவண்..

 சு.குணசேகரன்

மாநிலத் தலைவர்

வி எஸ் முத்துராமசாமி

 பொதுச் செயலாளர்

சே.நீலகண்டன்

 மாநில பொருளாளர்

ஜே எஸ் ஆர் மாளிகை,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,,

பெல்ஸ் ரோடு, சென்னை.

7 comments:

 1. இன்னும் கோரிக்கை மனுவா, நல்லா வருவீங்க. ஒரு வேளை நிறுத்த போராட்டம் நடத்துற தைரியம் இல்லை. நல்லா போடுறீங்க . ..ரா

  ReplyDelete
  Replies
  1. 1. உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும்
   2. படித்த மாணவர்களின் பெற்றோர்களை உங்களை மதிப்பிட அனுமதிக்க வேண்டும்
   3. பணி நேரத்தை 8 மணி நேரமாக உறுதிப்படுத்த வேண்டும்
   4. காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பயிற்சி நாட்களாக அமைக்க வேண்டும்
   5. வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்க வேண்டும்

   Delete
 2. ஒரு மயிரும் புடுங்க முடியாது உங்களால....

  ReplyDelete
 3. Aga motham vaelaiyae seiyamal salary matum aayiram kanakkil vanganum. Ithu thana ungal korikkai

  ReplyDelete
 4. இப்படி பொசுக்கென்று சொன்னால் எப்படி?!

  ReplyDelete
 5. Seniority la vanthuttu oru elavum theriaama....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி