தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2023

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

 

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு, வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு,1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் படுகிறது. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறும் தொழிலாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதற்கு, தொழிலாளர்களின் மாத சம்பளம் 25,000 ரூபாயாக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி