டிட்டோஜாக் - கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்டத்தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2023

டிட்டோஜாக் - கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்டத்தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)


6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்டத்தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


இடம்: அனைத்து மாவட்ட தலைநகரங்களில்


நாள்:11.9.2023, திங்கட்கிழமை, மாலை 5:30 மணி


ஆர்ப்பாட்டத்தலைமை: டிட்டோஜாக் அமைப்பிலுள்ள சங்கங்களின் கூட்டு தலைமை


கோரிக்கை விளக்கவுரை: டிட்டோஜாக் அமைப்பில் உள்ள சங்கங்களின் மாவட்ட /மாநில நிர்வாகிகள்


வாழ்த்துரை: டிட்டோஜாக் அமைப்பின் தோழமை சங்க நிர்வாகிகள்


நன்றியுரை: டிட்டோஜாக் அமைப்பில் உள்ள சங்க நிர்வாகி


கோரிக்கைகள்


1. எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கைவிடு!


2.EMIS-பதிவு பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிப்பு செய்!


3. விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தாதே!


4. CRC மையங்களுக்கும், பயிற்சி வகுப்பு களுக்கும் ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்தாதே!


5. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மூன்றாம் தரப்பு மதிப்பீடு மற்றும் ஆய்வினை கைவிடுக!


6. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை SMC கூட்டங்களை நடத்திடுக!


இவண்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்),

4 comments:

  1. வேலை நிறுத்த போராட்டம் மட்டுமே பழைய ஓய்வு ஊதியம் பெற்று தரும். மற்ற கோரிக்கைகள் எதுவும் வேண்டாம்

    ReplyDelete
  2. ஒன்றுக்கும் உதவாத இந்த 6 கோரிக்கைகள் தான் ஆசிரிய சங்கங்கள் முன்பு இருக்கும் தலையாய பிரச்சினை. இதில் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் பாருங்கள்

    ReplyDelete
  3. மிக பெரிய கோரிக்கைகள் வைத்துள்ள சங்க நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி. ஐயா, பழைய ஓய்வு ஊதியம் மட்டும் கேளுங்க, ஒரே கோரிக்கை கேளுங்க , நிறைவேற்றவில்லை என்றால், உடனடியாக வேலை நிறுத்த போராட்டம் பண்ணுங்க. இது உங்க தவறு இல்லை, உங்களை தலைவராக எற்று கொண்டு சந்தா தராங்களே அவங்க தப்பு...

    ReplyDelete
  4. 2026 சட்டமன்ற தேர்தல் அரிக்கயிலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்று கூறுவார் நமது முதல்வர். அதற்கும் நமது சங்க நிர்வாகிகள் கை தட்டுவார்கள். ஒருவரை நம்ப வேண்டியது தான், அதற்கும் ஒரு எல்லை இல்லையா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி