தமிழக பள்ளிகளில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2023

தமிழக பள்ளிகளில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!

தமிழக பள்ளிகளில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


பகுதிநேர ஆசிரியர்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி பாடங்களை எடுக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு அல்லது பணிப்பாதுகாப்புடன் கூடிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தில் 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் அவர்களுக்கு ஒரு நாளுக்கு சராசரி ஊதியம் ரூ.333/- மட்டுமே வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மைத் தகவல்களை (Educational Management Information System – EMIS) பதிவு செய்யும் பணிகள் அவர்கள் மீது தான் சுமத்தப்படுகின்றன. நிர்வாக பணிகளும் அவர்கள் தான் செய்கிறார்கள். அவர்களை 12 ஆண்டுகளாக அதே நிலையில் வைத்திருப்பது நியாயமற்றது. எனவே அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. ஆசிரியர்களை மதிக்காத எந்த அரசாங்கமும் நிலைத்து நின்றதில்லை

    ReplyDelete
  2. நல்லா தருவாங்க அல்வா. விரைவில் இவர்கள் எந்த ஒரு தேர்வும் எழுதி வெற்றி பெறாமல் எந்த அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடியும், அவ்வாறு செய்ய கூடாது என வழக்கு தொடர்வார்கள், தடையாணை பெறுவார்கள். இப்படியே இழுக்கும். அதற்குள் நமக்கு வயது ஆகிவிடும்.

    ReplyDelete
  3. சராசரியா ரூபாய் 333/ டேய் மாதத்தில் 12 அரை நாள் சம்பளம் 10000 அப்புறம் எப்படி சராசரி 333

    ReplyDelete
  4. தன் வாழ்க்கையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுங்கள். பல வருடங்களாக அதிமுக அரசு எந்த நியமனங்கள் செய்யாமல் தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமித்தது. அதை எதிர்த்து யாரும் போராட்டம் செய்ததில்லை.வழக்கு தொடுத்ததில்லை. ஒரு லட்சம் பேர் இந்தியாவில் இவ்வாறு பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப் பட்டு பாதி பேர் நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். இங்கு எவ்வளவு பேர் இந்த சொற்ப வருமானத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்து விட்டனர் என்று கணக்கு எடுத்து பாருங்கள்.

    ReplyDelete
  5. பல வருடங்களாக படித்து விட்டு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் நொந்து போய் உள்ள நிலையில் எங்கே சென்று தான் போராடுவது? தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமித்தது கடந்த அரசாங்கம். அதே போல் இந்த அரசு செய்கிறது. ஏன் தகுதி தேர்வு வைக்க வேண்டும்? இதை எங்கே சென்று கேட்க வேண்டும்? பகுதி நேர ஆசிரியர்கள் இந்தியா முழுவதும் நியமனம் செய்யப் பட்டது. பாதி பேர் நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் வெறும் 10000 சம்பளம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி????

    ReplyDelete
    Replies
    1. உங்களை யாரும் கட்டாயமாக இந்த பகுதி நேரம் வேலையை பார்த்தே ஆக வேண்டும் என்று கூறவில்லை. சம்பளம் போதவில்லை என்றால் வேற வேலைக்கு சென்று இருக்கலாம். இப்படி புலம்பி கொண்டு இருந்தால் உங்கள் வாழ்க்கைத் தான் போகும்.

      Delete
    2. முதலில் உங்களுக்கு என்ன தேவை என்று அதைக் கேட்டு போராடுங்கள். எங்கள் கோரிக்கையை எங்களை ஏமாற்றி இரண்டு பள்ளிகள் என்றெல்லாம் வாக்குறுதி அளித்த கல்வித்துறை அதிகாரிகளைப் பார்த்து கேட்கிறோம். தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசிடம் கேட்கிறோம். கடந்த அரசாங்கம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்தபோது எங்கே சென்றீர்கள்?

      Delete
    3. Ha ha ha. நீங்கள் கடைசி வரை போராட்டம் மட்டும் தான் பண்ண முடியும். உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்க போறதே இல்லை. உங்களை வைத்து இரண்டு கட்சிகளும் மாற்றி மாற்றி அரசியல் மட்டும் தான் செய்வார்கள்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி