நல்லாசிரியர் விருது பட்டியல்: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2023

நல்லாசிரியர் விருது பட்டியல்: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

 

தமிழக நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள் மீது, கிரிமினல் வழக்குகள் ஏதும் உள்ளனவா என, போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான, மத்திய அரசின் விருது பட்டியல் ஏற்கனவே வெளியாகி விட்டது. தமிழக அரசு சார்பில், 390 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுக்கான பட்டியலை தேர்வு செய்வதில், பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் தாமதம் ஏற்பட்டது.


விருது பட்டியல் நேற்று முன்தினம் மாலை தயாரான நிலையில், தேர்வானவர்களின் விபரங்கள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இரவோடு இரவாக, இயக்குனரகத்தில் இருந்து அனுப்பப்பட்டன. அதில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்கள் மீது புகார்கள், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளனவா என, ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


அத்துடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளனவா என்றும், போலீசார் வழியே விசாரித்து உறுதி செய்து கொள்ள, சி.இ.ஓ.,க்களுக்கு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி