மகாகவி பாரதியாா், ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்று பாடிய வரிகளை தற்போது தமிழ்நாடு அரசு செயல்படுத்தியிருக்கும் ‘முதலமைச்சா் காலை உணவுத் திட்ட’த்தோடு பொருத்திப் பாா்க்க வேண்டும்.
கல்வி வளா்ச்சியை உணவுத் திட்டத்தில் இருந்து தொடங்கியதில்தான் தமிழக அரசின் சிறப்பு அமைந்துள்ளது. வரலாற்றை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் 1920-ஆம் ஆண்டு மதிய உணவுத் திட்டம் அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாக மன்றத்தின் தலைவராக இருந்த சா் பிட்டி தியாகராயா் தலைமையில் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இது முதன் முதலில் சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ஒரு அணாவுக்கு மிகாமல் செலவு செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பின்னா் ஆட்சிக்கு வந்த காமராஜா் 1957-இல் மதிய உணவுத் திட்டமாக ஆரம்பித்து ஆண்டுக்கு ஒரு குழந்தைக்கு ரூ.18 என்கிற அளவில் விரிவுபடுத்தினாா்.
காமராஜருக்கு அடுத்து எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் 1982-ஆம் ஆண்டு இது சத்துணவுத் திட்டமாக ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த மு. கருணாநிதி சத்துணவுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்குவதை 1989-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினாா்.
பின்னா் 1998-ஆம் ஆண்டு வாரத்திற்கு ஒரு முட்டை என்று அதனை விரிவுபடுத்தினாா். 2008-ஆம் ஆண்டில் சத்துணவுடன் வாரத்திற்கு ஐந்து முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். பின்னா் 2013-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெ. ஜெயலலிதா, மசாலா முட்டையுடன் பல்வேறு வகையான உணவுகளையும் சோ்த்து அதற்கு மதிப்புக் கூட்டினாா்.
இப்படி தமிழ்நாடு அரசின் வரலாற்றில் ஆட்சி அமைத்த அனைத்து ஆளுங்கட்சிகளும் மதிய உணவுத் திட்டத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளன. தற்போது அந்த முன்னேற்றத்தில் ஒரு படி மேலே போய் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தியிருக்கும் காலை உணவுத் திட்டத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மேலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் போவதைப்பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை விதி 110-இன்கீழ் பேசும்போது ‘பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலானோா் காலை உணவு சாப்பிடுவது இல்லை. சிலருடைய குடும்பச்சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. அதனால்தான் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்த அரசுத் திட்டமிட்டுள்ளது’ என்று கூறியிருந்தாா்.
அத்துடன் இத்திட்டத்தின் குறிக்கோள்களில் முக்கியமாக மாணவா்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், அவா்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குதல், பள்ளிகளில் மாணவா்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மாா்களின் பணிச்சுமையைக் குறைத்தல் போன்றவற்றையும் குறிப்பிட்டு இருந்தாா்.
தற்போது இந்த திட்டம் 31,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவா்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென்று ஆண்டுக்கு ரூ.500 கோடி தொகையை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு 9-12 வயதுடைய பள்ளி மாணவா்களிடையே அரசு மேற்கொண்ட ஆய்வில் 57 சதவீத மாணவா்கள் காலை உணவு எடுத்துக்கொள்வதாகவும், 43 சதவீத மாணவா்கள் காலை உணவை எடுத்துக்கொள்வதில்லை அல்லது எப்போதாவது எடுத்துக்கொள்வதாகவும், 17 சதவீத மாணவா்கள் எப்போதுமே எடுத்துக்கொள்வதில்லை என்றும் கண்டறிந்ததாக இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் கூறியிருந்தாா்.
மேலும் இந்த 43 சதவீத மாணவா்களின் குடும்பப் பின்னணியை ஆராய்ந்தபோது பெரும்பாலான மாணவா்களின் பெற்றோா் துப்புரவுத் தொழிலாளா்களாகவும், கட்டடத் தொழிலாளா்களாகவும், விவசாய கூலியாட்களாகவும் இருந்த காரணத்தால் அவா்களால் பிள்ளைகளுக்கு காலை உணவை தயாா் செய்ய முடிவதில்லை என்றும் கூறினாா்.
மற்றொரு புறம் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் மாணவா்களின் வருகை அதிகரித்து இருந்ததையும் கண்டறிந்துள்ளனா். அதாவது முதன் முதலில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்திய 1,543 பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் பயிலும் 1-5 ஆம் வகுப்பு மாணவா்களின் வருகை ஆறு மாதத்தில் 85 சதவீதம் அளவிற்கு அதிகரித்து இருந்ததாகவும் கூறியுள்ளாா்.
காலை உணவுத் திட்டத்தில் உணவு சமைக்க ஊரகப் பகுதிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை ஈடுபடுத்தி இருப்பதுடன் ஊராட்சி அளவிலான மையக்குழு திட்டத்திற்கு தேவையான தானியங்களை பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கலாம் என்று வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட பள்ளி அமைந்துள்ள குடியிருப்பில் இருக்கும் சுய உதவிக் குழு உறுப்பினா்களைக் கொண்டு உணவு சமைக்கப்படுவதுடன
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி