தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2023

தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

வழங்கப்படும் படிப்புகள்:

பி.ஏ.எல்.எல்.பி., (ஹானர்ஸ்) - 5 ஆண்டுகள்எல்.எல்.எம்., - ஓர் ஆண்டுபிஎச்.டி.,

தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், எல்.எல்.எம்., படிப்பில் சேர்க்கை பெற குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் எல்.எல்.பி., படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.


பிஎச்.டி., படிப்பில் சேர எல்.எல்.எம்., படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய படிப்புகளில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., / எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீத சலுகை உண்டு.

தேர்வு முறை: அனைத்து படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஏ.ஐ.எல்.இ.டி., எனும் நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. சென்னை, மதுரை, பெங்களூரு, கொச்சி, மும்பை, டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 13

விபரங்களுக்கு: https://nludelhi.ac.in/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி