School Morning Prayer Activities - 04.09.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2023

School Morning Prayer Activities - 04.09.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.09.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : புலால் மறுத்தல்

குறள் :253


படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.


விளக்கம்:

படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல


பழமொழி :

Brids of same feather flock together

இனம் இனத்தோடு சேரும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்

கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்

பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸôண்டர்


பொது அறிவு :


1 ஈராக் நாட்டின் தலைநகரம்

விடை: பாக்தாக்

2. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?

விடை: பெங்களூர்


English words & meanings :


 ideal - உயர்ந்த சிந்தனையுள்ள inoculate- நோய்த்தடுப்பு ஊசி


ஆரோக்ய வாழ்வு : 


சோம்பு:சாப்பிட்டதக்கு அப்புறம் தினமும் கொஞ்சம் சோம்ப எடுத்து வாயில போட்டு மென்னு, சாற கொஞ்சம் கொஞ்சமா விழுங்கி வந்தா உணவு சீக்கிரமா ஜீரணமாகும். அதோட வாயுத் தொல்லையும் சரியாகும்.


நீதிக்கதை

உண்மையே உயர்வு.


மருதமலை நாட்டை நேர்மையான அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் ஒருநாள் மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.


இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார்.


“தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?” என்று கேட்டார்.


“திருடச் செல்கிறேன்” என்றான் அவன்.


“திருடுபவன் எவனாவது உண்மையைச் சொல்வானா? அப்படிச் சொன்னால் சிக்கிக் கொள்ள மாட்டானா” என்று கேட்டார் அரசர்.


“திருடனான என்னிடம் எல்லாத் தீய பழக்கங்களும் இருந்தன. என் தாய் என்னைத் திருத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. சாகும் நிலையில் இருந்த அவர் என்னை அழைத்தார். எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று என்னிடம் வாக்குறுதி வாங்கினார். அவரின் நினைவாக, அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன்” என்றான் திருடன்.


“தம்பி! நீ அரண்மனையில் திருட நான் உதவி செய்கிறேன். கிடைப்பதில் பாதிப் பங்கு எனக்கு தர வேண்டும்” என்றார் அரசர்.


திருடனும் ஒப்புக் கொண்டான். அரண்மனைக் கருவூலத்திற்குள் எப்படி நுழைவது என்று சொல்லித் தந்தார் அவர்.


கருவூலத்திற்குள் சென்ற அவன் இரண்டு வைரங்களுடன் வந்தான்.


“கருவூலத்தில் மூன்று வைரங்கள் இருந்தன. மூன்றையும் இழந்தால் அரசர் வருந்துவார். அதனால் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு இரண்டை எடுத்து வந்தேன். உம் பங்கிற்கு ஒன்று” என்று ஒரு வைரத்தை அரசரிடம் தந்தான்.


மறுநாள் அரியணையில் வீற்றிருந்தார் அரசர். பரபரப்புடன் அங்கே வந்த அமைச்சர்,அரசே! கருவூலத்தில் இருந்த வைரங்கள் மூன்றும் திருடு போய்விட்டன” என்றார்.


“மூன்று வைரங்களுமா திருடு போய் விட்டன?” என்று கேட்டார் அரசர்.


“ஆம் அரசே” என்றார் அமைச்சர்.


“திருடன் பொய் சொல்லி இருக்க மாட்டான். எஞ்சிய ஒரு வைரத்தை இவர்தான் திருடி இருக்க வேண்டும்” என்று நினைத்தார் அரசர்.


வீரர்களை அழைத்த அவர், “அமைச்சரைச் சோதனை இடுங்கள்” என்று கட்டளை இட்டார்.


வீரர்கள் அவர் இடுப்பில் ஒளித்து வைத்திருந்த வைரத்தை எடுத்தனர்.


“வீரர்களே! இன்ன இடத்தில் இன்ன பெயருடைய இளைஞன் இருப்பான் அவனை அழைத்து வாருங்கள்” என்று கட்டளை இட்டார்.


அவர்களும் அவனை அழைத்து  வீற்றிருந்தவரைப் பார்த்தான் திருடன். நேற்றிரவு தன்னைச் சந்தித்தவர் அவர் என்பதை அறிந்தான்.


என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று நடுங்கினான்.


“அமைச்சரே! இவன் திருடனாக இருந்தும் உண்மை பேசினான். நேர்மையாக நடந்தும்s கொண்டான். நீர் அமைச்சராக இருந்தும் திருடினீர். பொய் சொன்னீர். அதற்காக உம்மைச் சிறையில் அடைக்கிறேன்.


“இளைஞனே! திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடு உன்னை அமைச்சராக நியமிக்கிறேன்” என்றார் அவர்.


“அரசே! வறுமையில் வாடியதால் திருடினேன். இனி திருட மாட்டேன்” என்றான் திருடன்.


அவனைப் பாராட்டி அந்நாட்டின் அமைச்சராக நியமித்தார் அரசர்.


உண்மையே என்றும் உயர்வு தரும்.


இன்றைய செய்திகள் - 04.09.2023


*சென்னையின் பல இடங்களில் கனமழை - மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.

* தமிழகம் புதுச்சேரியில் ஆறு நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு.

*வாணியம்பாடியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு.

*' ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆய்வு பணி தொடக்கம் விரைவில் அறிக்கை தாக்கல்.

*காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.

* ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ தகவல்.

*ஜிம்பாவே முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹீத் உயிரிழப்பு - பிரபலங்கள் இரங்கல்.

 *ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி - பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.


Today's Headlines


*Heavy rain in many parts of Chennai - City Commissioner Radhakrishnan survey.

 * Tamil Nadu Puducherry is likely to receive six days of light rain.

 * One person died due to swine flu in Vaniyambadi.

 * 'One country, one election' survey work to start, report to be submitted soon.

 *Karnataka government filed a review petition in the Cauvery Management Authority.

 * Aditya L-1 spacecraft successfully lifted into orbit - ISRO informs.

 *Zimbabwe Star cricketer Heath Streak passed away   - Celebrities mourn.

  *Asian  5 men's hockey - India beat Pakistan and won the title.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி