பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லூரி களப் பயணம்: அக்.25-ம் தேதி தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2023

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லூரி களப் பயணம்: அக்.25-ம் தேதி தொடங்குகிறது

 

உயர்கல்வி குறித்த அறிமுகத்துக்காக பிளஸ் 2 மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் கல்லூரி களப் பயணம் நிகழ்வு வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ‘நான் முதல்வன்’ உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கடந்த கல்வி ஆண்டில் (2022-23) மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலில் கல்லூரி களப் பயணம் சிறப்பாக நடத்தப்பட்டது.


இதன்மூலம் 33,339 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்னர். உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு இருக்கும் அச்சம், குழப்பங்கள் நீங்குவதற்கு இந்த பயண அனுபவம் வழிசெய்தது. அதேபோல, இந்த கல்வி ஆண்டிலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் பயனடைய கல்லூரி களப் பயணம் நிகழ்வை அக்.25 முதல் 28-ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஒரு பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி