செய்திக்குறிப்பு :
தமிழக அரசின் சீரிய முயற்சியான அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை பண்பு பயிற்சிகள் இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது . இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் அனுபவ பகிர்வை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொகுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு கையேட்டினை தயாரிக்க ஆணையிட்டு இருந்தார்கள்.
இதன் அடிப்படையில் 40 - க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 291 பக்க அளவில் தலைமை ஆசிரியர் கையேடு பள்ளிக்கல்வி இயக்ககத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இக்கையேட்டில் தலைமை ஆசிரியர்கள் , உதவி தலைமை ஆசிரியர்கள் , வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களின் பணிகள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கமாக உள்ளது. மேலும் அலுவலக நடைமுறை பகுதியில் அலுவலகப் பணியாளர்களின் பணிகளும் , கடமைகளும் , பொறுப்புகளும் நிதி சார்ந்த நடைமுறை தகவல்களும் தரப்பட்டுள்ளன.
முதுகலை , பட்டதாரி , இடைநிலை மற்றும் சிறப்பு வழிகாட்டுதல்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது . மேலும் பள்ளிகளில் செஞ்சிலுவைச் சங்கம் , சாரணியர் இயக்கம் சுற்றுச்சூழல் மன்றம் , இலக்கிய மன்றம் , நூலக மன்றம் , வானவில் மன்றம் உள்ளிட்ட பல வகையான கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களும் ஆசிரியர்களுக்கான தரப்பட்டுள்ளன.
இக்கையேட்டினை இன்று 30.10.2023 அன்று மதுரையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டு தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள் . தலைமை ஆசிரியர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழும். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி