அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறனறி தேர்வு நாளை தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2023

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறனறி தேர்வு நாளை தொடங்குகிறது

 

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நாளை (அக்.17) தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் நோக்கத்தில் மாநில மதிப்பீட்டுப் புலம் பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.


அதன்படி நடப்பாண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.


அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நாளை (அக்டோபர் 17) முதல் 20-ம் தேதி வரை கற்றல் விளைவு, திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் https://exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக மதியம் 2 முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அந்த வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி