ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கேற்ப நிறைவேற்றப்படும்- அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2023

ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கேற்ப நிறைவேற்றப்படும்- அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:


கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 105 ஆண்டுகள் பழைமையானது. இதுபோல், 100 ஆண்டுகளைக் கடந்துள்ள பள்ளிகளுக்கு பழைமை மாறாமல் புதுப்பிக்க தமிழக முதல்வா் ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.


அதன்படி, இப்பள்ளி 2024இல் புதுப்பிப்பு பட்டியலில் சோக்கப்படும். மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் தேங்கும் நீரை அகற்றவும், வகுப்பறைகள்- திறந்தவெளி கலையரங்கம் ஆகியவற்றை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று இப்பள்ளியில் ஹாக்கி மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழ்நாட்டில் சுமாா் 31,000 பள்ளிகளில் 17.50 லட்சம் மாணவா்கள் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறுகின்றனா். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்துவது தொடா்பாக நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சா் முடிவெடுப்பாா். இத்திட்டம் தெலுங்கானாவிலும் செயல்படுத்தப்படுவது பெருமையாக உள்ளது. சத்துணவில் கோவில்பட்டி கடலை மிட்டாய் சோப்பது தொடா்பாக சமூக நலத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும்.


பள்ளிக் கல்வித் துறை சம்பந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆசிரியா்களின் போராட்டங்களைப் பொருத்தவரை, அவா்களது உணா்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே பாா்க்கிறோம். நிதி நிலைமைக்கு ஏற்ப அவா்களது ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

6 comments:

  1. தயவு செய்து ஆசிரியர் பணி நியமனம் பற்றி பத்திரிக்கை நண்பர்கள் கேள்வி கேட்காதீர்கள். நிதி நிலமை சரியான பின்பு அவரே ஆசிரியர்களை நியமிப்பார். எங்களுக்கும் இதனால் மன உளைச்சல் ஏற்படாது.

    ReplyDelete
  2. We want equal work equal pay for secondary grade teachers

    ReplyDelete
  3. We want computer science in govt schools from 6 to 10...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி