உரிமைகளை கேட்பது போல கடமைகளையும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2023

உரிமைகளை கேட்பது போல கடமைகளையும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்

5 ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களில் 60% பேருக்கு எழுத படிக்க தெரியவில்லை என பள்ளிக் கல்வி இயக்குநர் ஆதங்கம் - உரிமைகளை கேட்பது போல கடமைகளையும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டும் - டிட்டோ ஜாக் கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு அறிவுரை...
10 comments:

 1. பெரு மதிப்பிற்குரிய இயக்குனர் / பள்ளிக்கல்வித்துறைக்கு வணக்கம்.

  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பெரும்பாலான பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

  உண்மையாகவே அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை வறுமை கோட்டு க்கு கீழே உள்ள குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை இருந்தால் உடனடியாக ஒவ்வொரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் அல்லது ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் என்ற ஆணையை உடனடியாக பிறப்பிக்க நடவடிக்கை எடுங்கள்

  ReplyDelete
 2. இரண்டு வகுப்பறைகளையும் இரண்டு ஆசிரியர்களையும் வைத்துக்கொண்டு ஐந்து வகுப்புகளுக்கும் 25 பாடங்களுக்கும் கற்றல் கற்பித்தலை நடைமுறைப்படுத்துவது எவ்வகையில் சாத்தியமாகும்?

  முதலில் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் எமிஸ் பணிகளை ஒழித்து கட்டுங்கள் பயிற்சிகளை ஒழித்துக் கட்டுங்கள்.

  ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கற்பித்தல் முறை புதிய கல்வி முறை என்ற நிலையை ஒழித்துக் கட்டுங்கள்

  பள்ளிக்கல்வித்துறையின் தவறான கல்விக்கொள்கை முடிவால் தவறான கற்றல் கற்பித்தல் முறைகளால் தொடக்கக் கல்வி அழிந்து விட்டது

  ReplyDelete
 3. அ ஆ இ ஈ......

  A B C D .....

  1 2 3 4 .....

  எழுத்துக்களை வார்த்தைகளை எண்களை சொல்லிக் கொடுப்பதற்கு ஏன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கற்பித்தல் முறையை ...

  ஒவ்வொரு புதிய திட்டத்தை கட்டாயமாக புகுத்தி பள்ளிக் குழந்தைகளின் கல்வியை சீரழிக்கிறீர்கள்?


  ஆசிரியர்களின் கற்பித்தல் ஆர்வத்தை கெடுத்து கற்பித்தல் சுதந்திரத்தை கெடுத்து...


  இப்படித்தான்/
  அப்படித்தான் கற்பிக்க வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்?

  ReplyDelete
 4. அரசு தொடக்கப் பள்ளிகளில் இருக்கும் இந்த கல்வி முறைகள் கல்வி கொள்கை ஒருவகை மனித உரிமை மீறல் தான்

  குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது

  இதுவும் ஒரு வகை குழந்தைகள் உரிமை மீறல் தான்

  ReplyDelete
 5. கடமையை செய்வதா? எங்கே அவர்களை செய்ய விடுகிறீர்கள் ஆசிரியர் பற்றாக்குறை இதில் கற்பித்தல் பணியை செய்யவிடாமல் கண்ட கண்ட பணிகளை தலையில் சுமத்தினால் எப்படி கடமை செய்வது....

  ReplyDelete
 6. ஐயா AC அறைக்குள் உக்காந்து கொண்டு பச்சை பேனாவில் கையெழுத்து மட்டும் போடும் நீங்கள் எல்லாம் என்ன செய்து கிழித்து விட்டீர்கள்.இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் எதற்கு கொண்டு வந்திங்க. Text book , work book . எந்த மாநிலத்திலும் இந்த மாதிரி பாடத்திட்டம் கிடையாது.யாருக்கும் நன்மை கிடையாது. சும்மா பேசுரெண்ணு ஏதாவது பேச வேண்டாம்

  ReplyDelete
 7. Increase teacher is not director hand. It's govt policy. Give this request to our association leaders and adding list. New principal secretary Mr.Kumaragurubaran is a very active person. Maybe Namakkal district teachers known it. He will do good for teachers. Our association till not ask one class one teacher..

  ReplyDelete
 8. மிகவும் சரியான கருத்து. நிறைய பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் எண்ணிக்கை 60க்கும் குறைவாக தான் உள்ளது. கணிதம் பாடம் தவிர்த்து மீதம் உள்ள பாடம் தமிழ் மற்றும் ஆங்கிலம் சார்ந்தவை தான். தமிழ் ஆங்கிலம் எழுத்துக்களை கற்று கொடுக்க தமிழ் ஆங்கில ஆசிரியர் தான் வேண்டும் என்று இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களை எழுத படிக்க கற்று கொடுத்தாலே போதுமானது. இன்னும் ஆசிரியர்கள் பற்றா குறை என்று புலம்புவதை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு நன்றாக சொல்லி கொடுத்தாலே போதும். எதை எடுத்தாலும் அது சரி இல்லை நிறைய பணிகள் கொடுக்கிறார்கள் என்று புலம்பாமல் வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சிப்படி வேலை செய்தால் செய்தால் நன்றாக இருக்கும். பணிக்கு வருவதற்கு முன்பு இருக்கும் திறமை மற்றும் கற்பித்தல் ஆர்வத்தை இப்போதும் காட்டுங்கள் என்று தான் பெற்றோர்களாகிய எங்களின் வேண்டுகோள்

  ReplyDelete
  Replies
  1. மாணவர்களுக்கு கற்பித்தல் பணி மட்டும் தர சொல்லுங்கள்...சிறப்பாக அப்பணியை மேற்கொள்ளமுடியும்..அதைவிடுத்து மற்ற பணிகளில் கவனம் செலுத்த முற்படும்போது நம்முடைய முதன்மை பணியில் சரியாக ஈடுபட இயலவில்லை... மேலும் 2010களில் இருந்த பெற்றோர் மற்றும் மாணவர் மனநிலை வேறு தற்போதைய நிலை வேறு.... மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய ஆசிரியர் மட்டும் மாயாஜால வித்தை காட்ட இயலாது.. பெற்றோர் பங்களிப்பு மிகவும் அவசியம்.ஆனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மீது அக்கறை கொள்வதே இல்லை... ஆசிரியர்+பெற்றோர்+ மாணவர்=வெற்றி.... வெறும் ஆசிரியர் மீது மட்டும் திணிப்பது ஒருபோதும் முழுபலன் கிடைக்க வாய்ப்பில்லை..

   Delete
  2. பெற்றோர்கள் எங்களுக்கு தெரியவில்லை என்று தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். 2010 ஆண்டு முன்னர் வாங்கிய சம்பளமா இப்போது வாங்குகிரீர்கள்? சம்பளம் வருடம் இரண்டு முறை கூடுவது போல உங்கள் திறமையும் கூடி தான் ஆக வேண்டும். ஆசிரியர் பணி என்பது வெறும் பாடம் நடத்துவது மட்டும் இல்லை. பள்ளி சார்ந்த பிற வேலைகளையும் செய்வதும் தான். நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி முன்னாடி இருந்த மாதிரி உங்களால் free ah இருக்க முடியவில்லை. 2012 கு பிறகு பணியில் வந்த ஆசிரியர்கள் சிறப்பாக பணி செய்யும் போது மற்ற ஆசிரியர்கள் ஏன் செய்ய முடியவில்லை? என்றைக்காவது பாடம் நடத்த உங்களை நீங்களும் தயார் செய்து உள்ளீர்களா? வருவது படிப்பது கரும்பலகையில் எழுதி போடுவது. என்றைக்காவது ஆங்கில aasiriyargal guide use பண்ணாம paragraph question எழுதி போட்டு இருக்கிறீர்களா? சும்மா அரசையும் பெற்றோர்களையும் குறை கூறுவது நிறுத்தி விட்டு வாங்கும் சம்பளம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒற்ற மாதுரி வேலை செய்யுங்கள்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி