அரசு பணியாளர்களுக்கு உயர்கல்வியில் கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை எவ்வளவு ? பணியாளர் , நிர்வாக சீர்திருத்தத்துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2023

அரசு பணியாளர்களுக்கு உயர்கல்வியில் கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை எவ்வளவு ? பணியாளர் , நிர்வாக சீர்திருத்தத்துறை விளக்கம்

அரசுப் பணியாளர்கள் , பணியில் சேர்ந்த பிறகு அவர்களின் பதவிக்கு தேவையான கல்வித் தகுதியைவிட உயர் கல்வித்த குதியை முடிக்கும்போது அவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.


இந்த நடைமுறை கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டது . இதையடுத்து , ஊக்க ஊதியம் வழங் குவது குறித்த அறிவிப்பை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் , சட்டசபையில் கடந்த 2021 - ம் ஆண்டு செப்டம்பர் 7 - ந்தேதி , 110 விதியின் கீழ் அறிவித்தார். அதில் , அரசு பணியாளர்கள் அவர்களின் பணிக்காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020 - ம் ஆண்டில்ரத்துசெய்யப்பட்டது. 


அரசு பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதியின் மூலம் அவர்களின் பணித்திறன் மற்றும் செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்கு விக்கும் விதமாக , உயர்கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத் தொகை , மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த வழிகாட்டுதல் முறையின்படி விரைவில் அறிவிக்கப்படும் ' என்று தெரிவித் திருந்தார் . அதன்படி , கூடுதல் கல்வித்தகுதிக்கான ஒரே ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


அந்த அரசாணையில் , முனைவர் பட்டம் பெற்றால் ரூ .25 ஆயிரம் ஊக்க ஊதியத்தொகையும் , பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தவர்க ளுக்கு ரூ .20 ஆயிரம் , பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்திருந்தால் ரூ .10 ஆயிரம் வீதம் ஒருமுறை ஊக் கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 இந்த புதிய அரசாணைப்படி 2020 - ம் ஆண்டு மார்ச் 10 - ந்தே திக்கு முன் பணியில் சேர்ந்து உயர்கல்வி பெற்று ஊக்கத்தொகைக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 


இந்த உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ளது.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி