ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்: மேலும் ஒரு சங்கம் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2023

ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்: மேலும் ஒரு சங்கம் பங்கேற்பு

மயக்கமடைந்த, 99 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே வளாகத்தில் தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, இன்று முதல் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகம், ஆசிரியர்களின் போராட்ட களமாக மாறி உள்ளது.


இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.மூன்று சங்கத்தினரும், மழையையும் பொருட்படுத்தாமல், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் உண்ணாவிரதமிருந்த பலர் மயக்கம் அடைந்தனர். நேற்று, 35 பேர் மயக்கமடைந்தனர். மொத்தம், 99 பேர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அப்பகுதியில் ஆம்பு லன்ஸ் வாகனங்கள், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, இப்போராட்டத்தை துவக்குவதாக, கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானம். கிட்டத்தட்ட, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னும், தமிழக அரசு திரும்பிக் கூட பார்க்கவில்லை. 


எனவே, இனியும் தாமதிக்காமல், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் பேச்சு நடத்த வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

3 comments:

  1. இந்த அரசு கலைஞர் அரசு இல்லை போராட்டம் செய்தால் தீர்வு கிடைப்பதற்கு

    ReplyDelete
  2. தேர்தல் அறிக்கை என்பது இதுவெல்லாம் செய்யாலாம் என நினைப்பது. பிரதமர் கூட 15 லட்சம் தருகிறேன் என கூறினார். தந்தாரா? அதன் பின் நிதி நிலை ஒத்துழைக்க வில்லை. நீங்கள் திமுக விற்கு வாக்களிக்க வில்லை என்றாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் . உங்களுக்கு சம்பளம் பத்தவில்லை என்றால் தயவு செய்து உங்கள் பணியை ராஜினாமா செய்து விடுங்கள்..நாங்கள் உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் போதும், உங்களை விட சிறப்பாக பணி செய்வோம். தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். இவர்களை பணியை விட்டு நீக்கி விட்டு எங்களை பணி அமர்த்துங்கள். அரசு ஊழியர்கள் திமுக விற்கு வாக்களிக்க வேண்டாம். இலவச பஸ், உரிமை தொகை திமுக அதிக அளவு வாக்கு வாங்கி அதிகரித்து உள்ளது. நீங்கள் வாக்கு என்பதை சொல்லி மிரட்டுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எவ்வளவு தந்தாலும் பத்தாது. நீங்கள் அனைவரும் பணியை ராஜினாமா செய்யுங்கள். உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் நாங்கள் வேலை செய்கிறோம். உங்களுக்கு மாதம் 5 லட்சம் தந்தாலும் பத்தாது. 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி படும் பாடை நினைத்து பாருங்கள். டெட் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

    ReplyDelete
  3. நாளைக்கு நீயும் இந்த போராட்டம் நடத்தி தான் சம்பள உயர்வு கேட்க மாட்டாய்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி