செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2023

செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

 

இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில், நர்சிங், பொது மருத்துவம் படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, செவிலியர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கடந்த 2021, 2022 மற்றும் நடப்பு ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை அறிவியலில் நர்சிங், பொது மருத்துவம் படிப்பு முடித்த மற்றும் இறுதியாண்டு படிக்கும் 20 முதல் 28 வயது நிரம்பிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு, அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். 

இந்த தேர்வு ஆன்லைனில் நடைபெறும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, முதல் இரண்டு வாரங்கள் இணைய வழி கற்றல்; அடுத்த நான்கு வாரங்கள் தமிழகத்திலுள்ள மருத்துவ மனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர், www.thadco.com என்கிற இணையதளத்தில் பதிவு செய்யலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி