Kalai Thiruvizha District Level Winner List 2023 - 2024 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2023

Kalai Thiruvizha District Level Winner List 2023 - 2024

திண்டுக்கல் மாவட்டம் பள்ளிக்கல்வி துறை சார்பாக 2023-24 - ம் கல்வி ஆண்டிற்கு அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் / மாணவியர்களுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 26.10.2023 மற்றும் 27.102023 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளி / வட்டாரம் / மாவட்டம் அனைத்து நிலையிலான கலைத்திருவிழா போட்டிகளில் மாணவ / மாணவிகளை பங்கேற்கச் செய்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மேலும் மிகுந்த ஆர்வத்தோடும் உயிர்த் துடிப்போடும் கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று தமது தனித்திறமையையும் , குழு பாரம்பரிய மண்ணின் வெளிப்படுத்தியதோடு நமது ஒற்றுமையையும் பாதுகாத்துவரும் மாணவ / மாணவியருக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை , தொடக்கநிலை , தனியார் பள்ளிகள் ) , உதவி திட்ட அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோரது வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


 கலைகளை இணைப்பில் காணும் பட்டியலில் உள்ள கலைத்திருவிழா போட்டிகளில் மாவட்ட அளவில் பங்குபெற்று முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றுள்ள மாணவர்கள் சார்ந்த பள்ளிகளின் சிறப்பான ஆசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவியருக்கு தலைமையாசிரியர்கள் , பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் . மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணாக்கருக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் எதிர்வரும் 21.11.2023 முதல் அளவிலான போட்டிகளில் நமது 24.11.2023 வரை நடைபெற உள்ளது.


 மாநில மாணவச்செல்வங்கள் பங்குபெறும் அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசினை வென்றிட தேவையான தொடர் பயிற்சியினையும் வழிகாட்டுதல்களையும் மாணவர்களுக்கு வழங்கிட தொடர்புடைய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும் .

KALAI THIRUVIZHA DISTRICT LEVEL WINNER LIST VI-XII-2023-24


Kalai Thiruvizha District Level Winner List 2023 - 2024 | Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி