அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வின்படி, இளங்கலை படிப்புகளுக்கான செய்முறை, எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று இளங்கலை ப்ராஜெக்ட் தீசிஸ் தேர்வுக்கான கட்டணம் ரூ.300 இல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதுகலை செய்முறை மற்றும் அனைத்து எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.450 இல் இருந்து ரூ.650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று முதுகலை ப்ராஜெக்ட்டின் ஒவ்வொரு நிலைக்கும் கட்டண் ரூ.600 இல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்வுக் கட்டணத்துடன் சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, இளங்கலை, முதுகலை மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், இளங்கலை பட்டம் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகளின் கட்டணமும் ரூ.1,500 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வுகளுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து 50 சதவிகித தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி