பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் , ஆசிரியர் இல்லா பணியாளர்களுக்கான குறைதீர் புலம் இணையதளத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 29 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 17 சுருக் கெழுத்து தட்டச்சர் நிலை -3 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளைசர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக 2 லட்சத்து 29,905 ஆசிரியர்கள் , ஆசிரியர் இல்லாத 29,909 ஆசிரி பணியாளர்களுக்கான பணிப் பலன் சார்ந்த கோரிக்கைகளை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க ஏதுவாக , ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குறைதீர் புலம் ( Staff Grievance Redressal'Cell Portal and App ) என்ற செயலி மற்றும் இணையதளத்தை அவர் தொடங்கிவைத்தார்.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியது :
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட நாள்களுக்குள் கோரிக்கைகளுக்கு அவர்களின் கல்வித் துறை அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்படும் என்றார் அவர் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி