கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களை கொண்டு நியமிக்க கோரிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2023

கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களை கொண்டு நியமிக்க கோரிக்கை!!!

 

கணினி சார் 9000  பணியிடங்களை கணினி ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்ய வேண்டும்...


கலைஞர் அவர்களின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டுவரவும்வேலையில்லா கணினி ஆசிரியர்களின் செயல்கூட்டம் திண்டுக்கல் மாவட்டக்கிளையின் சார்பாக இன்று (05.11.2023) ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் School of TNPSC ல் நடைப்பெற்றது.கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தலைவர் தேனரசு அவர்கள் தலைமை தாங்கினார்.

மாவட்டச்செயலாளர் ஜான்பால் மற்றும் லாரன்ஸ் அவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வருகைபுரிந்த அனைவரையும்  மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ நித்தியா வரவேற்று பேசினார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் குமார் அவர்கள் கூட்டத்தை வழிநடத்தினார்.


இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மேனாள் கணினி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டப்பொறுப்பாளர் நாகேந்திரன் மற்றும் தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் ஆகியோர்  கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்


இறுதியாக மாவட்டப் பொருளாளர் சண்முகவேல் அவர்கள் நன்றி கூறினார்.


கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்


 1. முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வியில் கொண்டு வந்த 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசுப்பள்ளிகளில் கொண்டு வரவும்.2.அரசுப்பள்ளிகளில் கணினி சார் பணிகள

 மேற்கொள்ள 9000 கணினி பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்த மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு பணிநியமனம் செய்யும் போது கணினி அறிவியல் பாடத்தில்  பி.எட் படித்த கணினி ஆசிரியர்களை கொண்டு நியமிக்கவேண்டம்.


திரு வெ. குமரேசன் மாநில பொதுச் செயலாளர்,

தொடர்பு எண்: 8248922685,

9626545446.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்.655/2014.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி