ஆதார் போல் மாணவருக்கு வருகிறது அபார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2023

ஆதார் போல் மாணவருக்கு வருகிறது அபார்

  

'ஆதார்' போல், பள்ளி மாணவர்களுக்கென தனித்துவ அடையாள அட்டை, 'அபார்' எனும் பெயரில், விரைவில் வர உள்ளது.


மக்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது போல், நாடு முழுதும் பள்ளி மாணவ -- மாணவியருக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இந்த அட்டைக்கு, 'தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு' அதாவது 'அபார்' என, பெயரிடப்பட உள்ளது.


இதில், மாணவரின் முழுமையாக கல்வி விபரம், கூடுதல் திறமைகள் பதிவு செய்யப்பட உள்ளன.


'அபார்' அட்டையின் அடிப்படை தகவல்கள் அவர்களின் 'ஆதார்' தகவல்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் கருத்து கேட்புக்கு பிறகே, இதற்கு ஒப்புதல் வழங்கப்படும். இதுகுறித்து, விரிவான அறிவிப்புகள் அடுத்தாண்டு துவக்கத்தில் வெளிவர உள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி