பாடங்களில் எழும் சந்தேகங்களை மாணவர்கள் தயங்காமல் ஆசிரியர்களிடம் கேட்கவேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2023

பாடங்களில் எழும் சந்தேகங்களை மாணவர்கள் தயங்காமல் ஆசிரியர்களிடம் கேட்கவேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை

 

பாடங்களில் எழும் சந்தேகங்களை மாணவர்கள் தயங்காமல் ஆசிரியர்களிடம் கேட்கவேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை ‘மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தயங்காமல் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:


அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவியர் அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் பல்கலையின் பல்வேறு சிறப்பு விஷயங்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவியர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உங்களைவிட உங்களைப் பற்றி தமிழ்நாடு முதல்வர் அதிகம் சிந்திக்கிறார். கடந்த ஆண்டுகளில் எல்லாம் மதிய உணவுத் திட்டம் மட்டும்தான் இருந்தது.


இப்போது முதல்வர் கொண்டுவந்துள்ள காலை உணவுத் திட்டமும் செயல்படுகிறது.அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் பிளஸ் 2 வகுப்புக்கு பிறகு அவர்கள் எங்குசென்று படிக்கிறார்கள் என்பது குறித்தும் அக்கறையுடன் அரசு கவனிக்கிறது. மாணவர்கள் தங்களுக்கான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் தயங்காமல் கேட்கவேண்டும். அண்ணா பல்கலைக் கழகம் போன்ற சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் படிப்புகள், அங்கு இருக்கும் சிறப்புகள், வேலை வாய்ப்புகள் ஆ கியவற்றை அங்குள்ள பேராசிரியர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

3 comments:

  1. பள்ளி செல்ல தயக்கம் கொள்வது ஆசிரியரே...
    அடி தாங்க முடியலபா..

    ReplyDelete
  2. நான் ஸ்கூல் படிக்கறப்ப சந்தேகம்னா என் ஆள் கிட்ட தான் கேப்பேன் 😆😆

    ReplyDelete
  3. பேஸ்டிங் போடுவதில் சந்தேகம் யாரிடம் கேட்பது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி