Net தேர்வுக்கான பாடத்திட்டம் புதுப்பிப்பு – யுஜிசி அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2023

Net தேர்வுக்கான பாடத்திட்டம் புதுப்பிப்பு – யுஜிசி அறிவிப்பு!!

 

நெட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை புதுப்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


நெட் தேர்வு:

இளநிலை ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்கு தகுதியுள்ள உதவி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பொருட்டு வருடத்திற்கு இரண்டு முறை தேசிய தோ்வுகள் முகமை சார்பில் நெட் தேர்வு நடத்தப்படுகிறது. 82 பாடங்களில் இந்த நெட் தேர்வு நடத்தப்படும் நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை புதுப்பிக்கவுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.


மேலும், இந்த புதிய பாடத்திட்டத்தை அமைப்பதற்காக நிபுணா் குழு ஒன்று அமைக்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் அறிவித்துள்ளார். இவ்வாறு, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு கால அவகாசம் வழங்கப்படும் எனவும், மாணவர்கள் தேர்வு குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி