குழு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் .2009 - இன்படி பள்ளி மற்றும் குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது . பள்ளிகளை அனைத்து வகையிலும் மேம்படுத்திக் குழுந்தைகளுக்குத் தரமான கல்வியை உறுதி செய்திட சமூகத்தின் ஒரு அங்கமான பெற்றோர்களின் பங்கேற்பு என்பது மிகவும் முக்கியமானது.
அதனடிப்படையில் , பார்வையின்படி பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பானது கடந்த 2022 - ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழு குறித்த முதற்கட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது . பள்ளி மேம்பாடு மற்றும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியப் பங்குவகிக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானதாகும் . எனவே . முதற்கட்டமாக மாநில அளவில் தெரிவுசெய்யப்பட்ட 48 முதன்மைக் கருத்தாளர்களுக்கு ( மாநிலப் பயிற்சி அலகு- STU ) ( BRTEs : 41 மற்றும் DIET Faculties : 7 ) உண்டு உறைவிடப் பயிற்சியாக சேலம் , ஏற்காட்டில் " நெறியாளுகைத் திறன் " பயிற்சியானது 27.05.2023 முதல் 31.05.2023 வரை நடத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக மாவட்ட முதன்மைக் கருத்தாளர்கள் ( மாவட்ட பயிற்சி அலகு - DTU ) பயிற்சியானது தெரிவுசெய்யப்பட்ட BRTEs ஒரு வட்டாரத்திற்கு இருவர் மற்றும் SMC - DC ஒருவர் ஆகியோருக்கு இரண்டு நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சியாக மண்டல அளவில் 14.09.2023 முதல் 12.10.2023 வரை நடத்தப்பட்டது.
மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ( BRTEs ) மாவட்டக் கருத்தாளர்களைக் கொண்டும் . தெரிவுசெய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டும் பயிற்சியினை கீழ்க்காண் விவரப்படி நவம்பர் -2023 மாதத்தில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது .
Proceeding_Dist. level BRTEs training SMC members training_Nov 2023👇 Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி