பள்ளிக்கல்வித்துறை வழக்கு - 4 சட்ட ஆலோசகர்கள் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2023

பள்ளிக்கல்வித்துறை வழக்கு - 4 சட்ட ஆலோசகர்கள் நியமனம்

 

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நேற்று நடந்தது. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். 


கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தை மறு சீரமைப்பு செய்தல், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:


பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டு அவை நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை கவனிக்க சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மேலும் சில சட்ட வல்லுநர்கள் நியமிக்க வேண்டிய நிலை உள்ளது. 


அதனால் தொகுப்பு ஊதியத்தின் கீழ் 4 சட்ட வல்லுநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊதியம் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து வழங்கப்படும். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பெற்றோர் போலவும், பெற்றோரும் ஆசிரியர் போல இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று கூறினார்.

1 comment:

  1. மக்களின் பொது விருப்பத்தால் சட்டங்கள் ஆதரிக்கும் போது தான் அவை மக்களைக் கட்டுப்படுத்தும் என வாதிட்டவர்: பிரெஞ்சு சிந்தனையாளர் ரூசோ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி