ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2023

ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

 

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பாக,

"தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும்போது இந்த மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட வேண்டும்.


புதிய நியமனம் பெறக்கூடிய ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணியிட மாறுதல் வழங்கக்கூடாது. எந்த இடத்தில் பணியில் சேருகிறார்களோ, அந்த இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.

கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு முதலில் பணியிட மாறுதல் வழங்கவேண்டும். இந்த பணிகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் 30-ம் தேதிக்குள் முடித்து, அதன் பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவின்படி வரக்கூடிய காலங்களில் அனைத்தும் நடைபெற வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.


2 comments:

  1. அப்பாடா போராடிய ஆசிரியர்களுக்கு இன்னும் விடியல் வரலயேன்னு நினைச்சேன்.... வந்துடிச்சு....

    ReplyDelete
  2. நிர்வாக மாறுதல் மட்டும் நடைபெறும்...... சில லட்சங்ககளில்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி