ஆசிரியர்களுக்கு, 750 ரூபாய் தனி ஊதியம், 500 சிறப்புப்படி தொடர்ந்து வழங்க வேண்டும் - ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2023

ஆசிரியர்களுக்கு, 750 ரூபாய் தனி ஊதியம், 500 சிறப்புப்படி தொடர்ந்து வழங்க வேண்டும் - ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மல்லசமுத்திரத்தில் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கம், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் தேவராஜன் தலைமையில், 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மாநில பொருளாளர் முருகசெல்வராசன் பேசினார்.இதில், திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் தவறான தணிக்கை தடையை நிவர்த்தி செய்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு, 750 ரூபாய் தனி ஊதியம், 500 சிறப்புப்படி தொடர்ந்து வழங்க வேண்டும். தவறான தணிக்கை தடையை நிவர்த்தி செய்து, தேர்வுநிலை இடைநிலை தலைமையாசிரியர்களுக்கு, 5,400 ரூபாய் தர ஊதியம் வழங்க வேண்டும். 


மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளை சமன் செய்து, இளையோருக்கு இணையான ஊதியம் பணிமூப்பு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தகவலறிந்து வந்த நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம், மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 


இதில், மல்லசமுத்திரம் யூனியன் ஆசிரியர்களின், 12 அம்ச கோரிக்கைகளுக்கும் எதிர்வரும், 2024 ஜன., முதல் வாரத்தில் முழுமையான தீர்வு காணப்படும் என்று எழுத்துப்பூர்வமாக மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தெரிவிப்பர் என, நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் தெரிவித்தார். இதனடிப்படையில், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி