பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2023

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

 

நாடு முழுவதும் இதர பிற்படுத்தப் பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர், ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2023-24-ம் ஆண்டுக்கு https://scholarships.gov.in/public/FAQ/topclass school list 2211 compressed.pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இத்திட்டத்துக்கான பெற் றோரது உச்சகட்ட வருமான வரம்பு ரூ.2.5 லட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2023. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கடைசி நாள்:15.01.2024. இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுசெய்து 2023-24ம் ஆண்டுக்கான விண்ணப்பித்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.


இத்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 8 மற்றும் 10ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப் படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது வழங்கப் படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10ம் வகுப்புகளில் மதிப்பெண் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் சென்று தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை Fresh Application என்ற இணைப்பின்கீழ் பதிவுசெய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://scholarships.gov.in மற்றும் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தை (https://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி