அரையாண்டுத் தேர்வு தள்ளிவைப்பு - தமிழக அரசின்ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2023

அரையாண்டுத் தேர்வு தள்ளிவைப்பு - தமிழக அரசின்ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிப்பு

தொடர் கனமழையால் பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க பள்ளிக்கல்வித் துறை திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரையாண்டு தேர்வு நடப்பு கல்வியாண்டு முதல்மாநில அளவில் ஒரே வினாத்தாள்அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை கடந்தமாதம் வெளியிட்டது. அட்டவணைப்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு டிசம்பர் 7 முதல் 22-ம்தேதி வரையும், 6 முதல் 10-ம் வகுப்புக்கு டிசம்பர் 11 முதல் 21-ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.


இந்நிலையில் மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் தொடர்கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வைத் தள்ளிவைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ``தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், மாணவர்களும் தேர்வுக்குத் தயாராக ஏதுவாக அரையாண்டுத் தேர்வைத் தள்ளிவைக்க ஆலோசனை செய்து வருகிறோம். தமிழக அரசின்ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்'' என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி